India Pakistan Trade War: பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது பாகிஸ்தானுக்கு ரூ. 4300 கோடி நஷ்டம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
India Pakistan Trade War : பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது பாகிஸ்தானுக்கு ரூ. 4300 கோடி நஷ்டம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது கடந்த ஒரு வாரமாக அந்த பதற்றம் குறைந்துள்ளது.
வெயிலில் வாய் துர்நாற்றம் வருகிறதா? இதோ 10 நிமிடத்தில் வீட்டில்உடனடி சிறந்த தீர்வு!குழந்தைப் பெற்றுக்கொள்ள ஏற்ற வயது எது? மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் பிரசவ வயது!வெறும் வயிற்றில் மோர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா? ஒரு கப் மோர் ஓராயிரம் நன்மைகள்! பகல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இந்தியாவை மட்டுமின்றி சர்வதேச சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காட்டுமிராண்டித்தனமான இந்த பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில், மற்ற நாடுகளின் துணையில்லாமல் தனியாகவே பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மொத்தமாக தரைமட்டமானதாக இந்தியா ஆதாரத்துடன் தெரிவித்த நிலையில், 100 பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து தற்போது இந்தியா, பாகிஸ்தான் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கப்போகிறது. இதன்மூலம், பயங்கரவாதத்திற்கான அவர்களின் நிதி ஆதரவு முற்றிலுமாக நின்று போகும் என கூறப்படுகிறது. இந்தியா ஏற்கெனவே பாகிஸ்தான் உடனான வணிகத்தை முற்றிலும் நிறுத்திவிட்டது. தற்போது மற்ற மூன்றாம் தர நாடுகளின் வழியாக, அதிலும் வளைகுடா நாடுகளின் வழியாக பாகிஸ்தான் இந்தியாவுக்கு அனுப்பும் பொருள்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடைவிதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பேரீச்சம்பழம் உள்ளிட்ட பல பொருட்களை இந்தியாவுக்கு வளைகுடா நாடுகளின் வழியாக அனுப்ப பாகிஸ்தான் முயற்சித்துள்ளது.இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியாவும் தனது ஆட்சேபனைகளை எழுப்பி இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகள், இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான விரிவான பொருளாதார கூட்டாண்மைக்கு எதிராக அமைவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை அதிக கவனத்துடன் கையாள இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அவற்றில் உள்ள நாட்டின் லேபிள்களை இந்திய நிறுவனங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புறவாசல் வழியாகக் கூட பாகிஸ்தான் தயாரிப்பு பொருட்கள் இந்தியாவிற்குள் நுழைய முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள், கப்பல்களின் நடமாட்டத்தை இந்தியா கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.இந்தியாவும் சரி, பாகிஸ்தானும் சரி சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற வளைகுடா நாடுகளுடன் நிறைய வணிகத் தொடர்புகளை வைத்திருக்கின்றன. எனவே, பாகிஸ்தான் தனது பொருட்களை இந்த வளைகுடா நாடுகளில் கொண்டுபோய் இறக்குகிறதா என்பதை இந்திய நிறுவனங்கள் சரிபார்த்து, பின்னர் அவற்றை இந்தியாவிற்கு அனுப்பும் என கூறப்படுகிறது. நிறுவனங்கள் ஒரு பொருள் தயாரிக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து அதன் மீதான சுங்க வரி போன்றவற்றைத் தீர்மானிக்கும். பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு அனுப்பக்கூடிய பொருள்களை கண்டறிய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள கடத்தல் தடுப்பு நிறுவனம் மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை தொடர்ந்து செயல்படுகின்றன. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அல்லது மற்ற நாடு வழியாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்படும் பாகிஸ்தானிய பொருட்களின் இயக்கத்தை நிறுத்துமாறு மே 2ஆம் தேதி அன்றே சுங்கத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்திய அரசின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு 4300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.மேலும் படிக்க | பாக். பிரதமர் அறிவிப்பு: தீவிரவாதம் மேலும் வளருமா?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!உங்கள் UAN தவறான ஐடியில் இணைக்கப்பட்டுள்ளதா? EPFO எடுத்த மிகப்பெரிய முடிவுLoan EMI TipsMars Transit 2025India Pakistan Ceasefire
4300 Crore Loss For Pakistan India Pakistan Trade War India Pakistan War India Pakistan War Ceasefire India Pakistan Trade Indian Government Pakistan Government Indian Army Pakistan Army India Pakistan News Latest India Pakistan News India Pakistan Updates பாகிஸ்தானுக்கு 4300 கோடி ரூபாய் நஷ்டம் இந்தியாவால் பாகிஸ்தானுக்கு 4300 கோடி ரூபாய் நஷ்டம இந்தியா பாகிஸ்தான் வணிக போர் இந்தியா பாகிஸ்தான் போர் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் இந்தியா பாகிஸ்தான் வணிகம் இந்திய அரசு பாகிஸ்தான் அரசு லேட்டஸ்ட் இந்தியா பாகிஸ்தான் செய்திகள்
Canada Latest News, Canada Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மத்திய அரசு திட்டத்தில் வீடு கட்ட சூப்பர் வாய்ப்பு, ரூ.2.50 லட்சம் மானியம்..!!PM Awas Yojana : மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
தமிழ்நாடு அரசின் மாஸ் அறிவிப்பு, தொழில் தொடங்க கடன் உதவி - ரூ.1 கோடி வரை மானியம் பெறலாம்Tamilnadu Government : அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு சுய தொழில் திட்டத்தில் தொழில் கடன் பெற விண்ணப்பிக்காலம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Read more »
Unified Digital ID System: புதிய அரசாங்க போர்டல்... Aadhaar, PAN, Voter ID அனைத்தையும் ஒரே இடத்தில் அப்டேட் செய்யலாம்Unified Digital ID System: ‘ஒருங்கிணைந்த டிஜிட்டல் அடையாள அமைப்பு’ என்ற புரட்சிகரமான திட்டத்தை மோடி அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. இதை பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Read more »
Operation Sindoor: 54 ஆண்டுகளுக்கு பின் இந்தியா எடுத்த முக்கிய முடிவு! என்ன தெரியுமா?Operation Sindoor: 54 ஆண்டுகளுக்கு பின் இந்தியா எடுத்த முக்கிய முடிவு! என்ன தெரியுமா?
Read more »
பாகிஸ்தான் போர் பதற்றம்! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!India Pakistan War: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்படும் சூழல் நிலவு வரும் நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Read more »
LIVE : பஞ்சாப் ரெட் அலெர்ட் மத்திய அரசு அதிரடி முடிவு ஐபிஎல் மீண்டும் தொடங்கும் தேதி- இன்றைய அப்டேட்ஸ்LIVE : பஞ்சாப் ரெட் அலெர்ட் மத்திய அரசு அதிரடி முடிவு ஐபிஎல் மீண்டும் தொடங்கும் தேதி- இன்றைய அப்டேட்ஸ்
Read more »




